வியாழன், 10 செப்டம்பர், 2009

அப்பாஸ் கவிதைகள்


கோடுகள்

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக் கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியே தான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே.

நண்பகல்

என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்து விடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதிய வேளையில்
வெளியேறும் போதும்
என்னிடத்தில்
சொல்லிக் கொள்வதே இல்லை
கேட்காமலும் சொல்லிக் கொள்ளாமலும்
வரும் போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒரு முறை
வா
எனது மகளே.


வெளியே

ஒரே புழுக்கமாய் இருக்கிறது
என் மீது எதையும் ஏற்றாதே
உனது வார்த்தைகளும் போரடிக்கிறது
நகருக்கு வெளியே கூட்டிப் போ என்னை
சுவரில் சாய்த்து வைத்த
சைக்கிள் சொல்லிற்று
இப்போது அதை அழைத்து
வெளியே போய்க் கொண்டிருக்கிறேன்.

( அப்பாஸ் அவர்களின் ஆறாவது பகல் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. அகம் வெளியீடு )

14 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

அருமை!

பகிர்விற்கு நன்றி யாத்ரா!

//கேட்காமலும் சொல்லிக் கொள்ளாமலும்
வரும் போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒரு முறை
வா
எனது மகளே.//

மனதிற்கு மிகவும் நெருக்கமாகிறது

Thamira சொன்னது…

சிம்பிள் பட் பவர்ஃபுல் கவிதைகள்.!

Ashok D சொன்னது…

:)

சுந்தர் சொன்னது…

சைக்கிள் கவிதை மிக அருமை, பகிர்வுக்கு நன்றி !

மண்குதிரை சொன்னது…

thahks for sharing

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ப்ச். நல்ல கவிஞன் :(

காமராஜ் சொன்னது…

சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதிய வேளையில்
வெளியேறும் போதும்
என்னிடத்தில்
சொல்லிக் கொள்வதே இல்லை//

நண்பகல் குறித்த விசாரம் அழகு.
அதுபோல விரல்களில் வழியும் வர்ணக்கோடுகளும்
அனாயசமான வர்ணனை.
பகிரதலுக்கு நன்றி யாத்ரா

க. தங்கமணி பிரபு சொன்னது…

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

பா.ராஜாராம் சொன்னது…

அருமையாய் இருக்கிறது.நன்றி யாத்ரா.

Karthikeyan G சொன்னது…

Thanks for sharing!!

TKB காந்தி சொன்னது…

"நண்பகல்" - அருமை யாத்ரா :)

சந்தான சங்கர் சொன்னது…

நண்பகலை
நற்பகலாக்கிய
நண்பனுக்கு
நன்றி...

G.S.Dhayalan சொன்னது…

கவிதைத் தேர்வுகள் நமக்கான இடைவெளியின்மையை வெளிப்படுத்துகிறது.
மனதோடு நெருக்கமாகவும் சுவராஸ்யமாகவும் இருந்தது உங்கள் கேள்வி பதில். சந்திக்க விரும்பும் நண்பராக இருக்கிறீர்கள். . உங்கள் வலைப் பதிவு மூலமாகத்தான் பெரும்பாலான பதிவுகளுக்கு செல்கிறேன். நன்றி

நந்தாகுமாரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி யாத்ரா