செவ்வாய், 23 ஜூன், 2009

எங்களின் ஒரு மாலைப்பொழுது


காற்று அளைந்து விட்டுக்
கொண்டிருந்ததவள் குழலை
மடியில் கிடந்து
மார்பில் புரளும் கற்றைகளை
விரல்நுனியில் சுருட்டி விட்டுக் கொண்டிருக்க
ஓயாத அலைகளை இமைக்காது
வெறித்துக் கொண்டிருந்தாள்
அவள் விரல் நக
விளிம்புகளையும் ரேகைகளையுமென்
நகத்தால் வரைந்தும்
புறங்கை ரோமக்கால்களை
லேசாய் ப்ற்றியிழுத்தும்
கைக்கடிகாரத்தையும் வளையல்களையும்
முன் பின்னாயிழுத்து விட்டும்
தாவணி நுனியில் முடிச்சிட்டும் அவிழ்த்தும்
நீள கழுத்துச்செயின் டாலரை
லேசாய் ஊஞ்சலாட்டிக் கொண்டும்
நகக்கணு சேகரங்களையகற்றியபடியும்
விரல்களுக்கு சொடுக்கெடுத்தும்
நெயில் பாலிஷை சுரண்டி விட்டுக் கொண்டுமிருந்தேன்
எதற்கும் எச்சலனமுமில்லை
சற்றே மறந்திருந்த காரணம் நினைவு வர
மெல்ல எழுந்து இடைவெளி விட்டமர்ந்தேன்
மௌனத்திற்கு
இசையமைத்துக் கொண்டிருந்தன அலைகள்
மணலில் அழித்தழித்து எழுதிக் கொண்டிருக்க
இமையோரத்திலிருந்து ஒற்று முற்றுப்புள்ளிகள்
விழுந்து கொண்டிருந்தன
இறுக்கமான மௌனம் வதைத்துக் கொண்டிருக்க
வழக்கமான விடைபெறுதலின்றி
புதைகுழியாய் கால்களிழுக்க
திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன்
இன்னும் கடலையே வெறித்துக் கொண்டிருக்கிறாள்

20 கருத்துகள்:

Unknown சொன்னது…

//மௌனத்திற்கு
இசையமைத்துக் கொண்டிருந்தன அலைகள்
மணலில் அழித்தழித்து எழுதிக் கொண்டிருக்க
இமையோரத்திலிருந்து ஒற்று முற்றுப்புள்ளிகள்
விழுந்து கொண்டிருந்தன //

நல்ல அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் யாத்ரா.
மௌனம் விரைவில் கலையட்டும்.

ஆ.சுதா சொன்னது…

ஏதோ ஒரு சொல்ல முடியாத மௌனம் உடைபடுவது போல் கவிதை சொற்கலால் ஆழப்பட்டுள்ளது.
உங்கள் வள்ளிக்காக எழுதியது. உங்கள் உண்ரவு கரைந்துள்ளது.

Vidhoosh சொன்னது…

///இமையோரத்திலிருந்து ஒற்று முற்றுப்புள்ளிகள்
விழுந்து கொண்டிருந்தன///
யாத்ரா. ஒவ்வொரு வரியையும் பாராட்ட வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால், எல்லாவற்றையும் கூறிவிட்ட இந்த வரிகள் மீண்டும் மீண்டும் இக்கவிதையை படிக்கத் தூண்டுகிறது. :) "அத்தா உல்லாஹ் கான்" (Attaullah Khan) என்ற பாகிஸ்தான் கவிஞரின் கவிதைகளைப் போல, மற்றொரு முறை என் மனம் கனமாகி, இதயம் இருப்பதை உணரச்செய்கிறது உங்கள் கவிதைகள்.

Ashok D சொன்னது…

:)
:(

ரகசிய சிநேகிதி சொன்னது…

அருமை யாத்ரா...

ச.முத்துவேல் சொன்னது…

/அவள் விரல் நக
விளிம்புகளையும் ரேகைகளையுமென்
நகத்தால் வரைந்தும்
புறங்கை ரோமக்கால்களை
லேசாய் ப்ற்றியிழுத்தும்
கைக்கடிகாரத்தையும் வளையல்களையும்
முன் பின்னாயிழுத்து விட்டும்
தாவணி நுனியில் முடிச்சிட்டும் அவிழ்த்தும்
நீள கழுத்துச்செயின் டாலரை
லேசாய் ஊஞ்சலாட்டிக் கொண்டும்
நகக்கணு சேகரங்களையகற்றியபடியும்
விரல்களுக்கு சொடுக்கெடுத்தும்
நெயில் பாலிஷை சுரண்டி விட்டுக் கொண்டுமிருந்தேன்/

ரசனைக்காரன்யா நீ. சிரிச்சுக்கிட்டே இதெல்லாம் எனக்கு நானே செய்துபாத்து ரசித்தேன். demo. அப்படியே பசுமையா எழுதி , எங்களையும் உள்ளே இழுத்துக்கறீங்க.

ச.முத்துவேல் சொன்னது…

ச்சே! அதுக்கப்புறம் ரொம்ப feel ஆயிருச்சுபா.கனமாயிடுச்சி மனசு.என்ன சொல்றதுன்னே தெர்ல.

நந்தாகுமாரன் சொன்னது…

ஒரு introspective கவிதை evocative ஆக இருக்கிறது

பிரவின்ஸ்கா சொன்னது…

முத்துவேல் அவர்கள் சொன்னதை போலத்தான்,
ரசித்துக்கொண்டிருந்தேன்.........
பிறகு மனம் கனமாயிடுச்சி.

கவிதை அருமை.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

காமராஜ் சொன்னது…

அன்னியோன்னொயத்தின் அடர்த்தி
பிரிவின் வதையை கூட்டுகிறது

கவிதை சூப்பர்

butterfly Surya சொன்னது…

அருமை

நண்பரே நலமா..?

"உழவன்" "Uzhavan" சொன்னது…

வரிவரியாக ரசிக்க முடிந்தது நண்பரே.. அருமை

த.அகிலன் சொன்னது…

வார்த்தைகள் சித்திரங்களாய் மனதுக்குள் எழுந்தலைகின்றன வாசிப்பின் போது..

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நானந்த காட்சிகளில்-
அவளை பொருத்திப்பார்த்தேன்...

Kumky சொன்னது…

அண்ணாச்சி தேடிப்புடுச்சு வந்து சேந்துட்டமுல்ல...இனிமேட்டு கச்சேரிய ஆரம்பிச்சுருவோம்.எப்பூடி?

உயிரோடை சொன்னது…

க‌விதை ந‌ல்லா இருக்கு யாத்ரா.

Sugirtha சொன்னது…

உங்கள் வலி புரிகிறது யாத்ரா.

இந்த மாதிரியான சமயங்களில் எனக்கு மௌனமாய் இருப்பது பிடிக்கும். என் புரிதலை நான் அப்படித்தான் என் நண்பர்களிடம் வெளிப்படுத்துவேன்/ பகிர்ந்துகொள்வேன். உங்களோடும் அப்படியே.

யாத்ரா சொன்னது…

பாஸ்கர், முத்து, வித்யா, அசோக், மேகா, முத்துவேல், நந்தா, பிரவின்ஸ்கா, காமராஜ், சூர்யா, உழவன், அகிலன், தமிழன், கும்க்கி கருணா, லாவண்யாக்கா, சுகிர்தா அனைவருக்கும் நன்றி.

Ayyanar Viswanath சொன்னது…

/தாவணி நுனியில் முடிச்சிட்டும் அவிழ்த்தும்/
still u get this option ahh... great man :)

இரசிகை சொன்னது…

ovvoru varikalum arumai..