திங்கள், 13 ஜூலை, 2009

நிலைக்கண்ணாடி


கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
அருகில் வந்து பார்க்க
உன்னில் அப்படியே நானிருந்தேன்
தவறாக புரிந்து கொண்டமைக்கு
சற்றே வருந்தி
மன்னிப்பு கேட்டுச்
சென்ற என்னையழைத்து
என்னில் தன்னை சில கணம்
பார்த்துச் செல்பவர்களுக்கிடையில்
என்னில் வசிக்க விரும்பிய இதயமே
பிரியமே உன் நம்பிக்கையும் நேசமும்
என்னை வீழ்த்திவிட்டது
என் தனிமைக்கு விமோசனமளித்து
எப்போதும் என்னை விட்டகலாதிருப்பாயாவென
இறைஞ்சி கலங்கினாய்
உன் பிரியத்தின்
கனம் தாளாமல் பரிதவித்தேன்
மெதுமெதுவாய் பின்னால் நகர்ந்து
உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை
நீ நேசித்த என்னை
நான் விரும்பிய உன்னில்
நிரந்தரமாய் இருத்திக் கொள்ள
இயலாமல் போன
குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்கிறது
பிறகான தருணங்களில்
உன்னை நெருங்கி கடக்கும் போதெல்லாம்
நீ பார்க்கும் பார்வை

30 கருத்துகள்:

Vidhoosh சொன்னது…

இப்படி ஒரு அற்புதமான கவிதைக்கு என்னவென்று கருத்து சொல்வது.
வார்த்தைகளைத் தேடுகிறேன்...
மீண்டும் மீண்டும் கவிதை மட்டும் படிக்கிறது என் கண்கள்.

Ashok D சொன்னது…

சட்டென்று அணைத்து இறுக்கி உச்சிமுகர்ந்தேன்
நிலைக்கண்ணாடியை

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

அசத்தலான கவிதை யாத்ரா.. வித்தியாசமான சிந்தனை.. இனி ஒவ்வொரு முறை கண்ணாடியை கடந்து போகும் போதும் இந்த நினைவுகள் தோன்றும்.. அருமை..

Joe சொன்னது…

//
கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
//
எப்போதும் ஆண்களுக்கு சந்தேகப் புத்திதானோ?

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
கவிதை மிக அருமை.
(திரும்பத்திரும்ப வரும் உன், என் என்பதை வேறுவிதமாக அமைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மதன் சொன்னது…

Well.. Yet another direct hit தல.. வேற என்ன சொல்றதுனு தெரில.. வாழ்த்துக்கள்!

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

அருமை.

ny சொன்னது…

அட!!

ச.முத்துவேல் சொன்னது…

எப்படி இப்படில்லாம்! தரையிலிருக்கும் ஈரம், எறும்பு, கண்ணாடி என எல்லாமே கவிதையா(க்)கிவிடும் நுட்பம், திறன்..!

ரொம்ப நல்லாயிருக்கு யாத்ரா.

பிரவின்ஸ்கா சொன்னது…

கவிதை மிகவும் அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் சொன்னது…

கண்ணாடி நல்லாயிருக்கு யாத்ரா

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா.

மாதவராஜ் சொன்னது…

நல்லா வதுருக்கு தம்பி..

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி சொன்னது…

மிகவும் அருமை...

தேனீ சொன்னது…

குயிலின் இனிமை இந்த‌ க‌விதையில், பாராட்ட‌ வார்த்தையில்லை. எப்ப‌டி உங்க‌ளால் ம‌ட்டும்.....?

நேசமித்ரன் சொன்னது…

யாருமற்ற வெளியில் பேசிக்கொள்ளவும் நேசிக்கவும் கண்ணாடி மட்டும் மிச்சமிருக்கும் இக்கவிதையின் அடிச்சரடு மிகவும் அழுத்தம்
வாழ்த்துக்கள் யாத்ரா!

உயிரோடை சொன்னது…

த‌லைப்பின் வைத்து பார்க்கும் போது,

//கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
அருகில் வந்து பார்க்க
உன்னில் அப்படியே நானிருந்தேன்//

எத்த‌னை முறை அருகில் வ‌ந்தாலும் க‌ண்ணாடியில் ந‌ம் பிம்ப‌ம் தெரிய‌த் தானே செய்யும். ரொம்ப‌ அருமையான‌ சிந்த‌னை. அசால்டா அருமையா எழுத‌ற‌தே வ‌ழ‌க்க‌மாகிவிட்ட‌து யாத்ராவிற்கு.

//உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை//

இந்த‌ வாக்கிய‌மும் பிடித்திருக்கின்ற‌து இந்த‌ க‌விதையில்.


But,

இன்னும் கொஞ்ச‌ம் ந‌ல்லா எழுதி இருக்க‌லாம் யாத்ரா. நிறைய‌ இட‌ம் வ‌ச‌ன‌ம் பேசிய‌து போல‌ இருக்கு.

KarthigaVasudevan சொன்னது…

நல்ல கவிதை..வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்,ஏதோ ஒன்று விடுபட்ட உணர்வை அளிக்கிறது,
''உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை"

இந்தக் கற்பனை அழகு.

வால்பையன் சொன்னது…

அனைவரது பாராட்டுக்கும் தகுந்த கவிதை தான்!

சிறுசாக இருந்தால் சரக்கை கலந்திருப்பேன்!

Vidhoosh சொன்னது…

இன்று மீண்டும் படித்தேன் இந்தக் கவிதையை. நிலைக்கண்ணாடியில் நம் பிரதிபலிப்பை பார்த்துக் கொள்ளும் மகிழ்ச்சி.

சிறிது பின்னால் நடந்து போனால் பூச்சி போல சிறிதாய் போன நான்...

TATA நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒரு வாசகம் வரும் "காலை முதல் இரவு வரை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நடையிலும் உங்களோடு நாங்கள் இருப்போம்" என்று. அதே போல

அதே போல, நீங்கள் பார்த்த எறும்பு, தரையின் ஈரம், குழந்தையின் வெற்று வெளி உதையல், உங்கள் மாலை பொழுது, சாசனம் எல்லாம் நான் தினமும் தினமும் கூடவே வருகிறது உங்கள் கவிதைகளும்.

மண்குதிரை சொன்னது…

nalla irukku nanba

பா.ராஜாராம் சொன்னது…

தளங்களில் இருத்தும் மென்மையும் அபூர்வமும்,
வாழ்த்துக்கள் யாத்ரா!

நேசமித்ரன் சொன்னது…

@ யாத்ரா
இமைகளின் கீழ் emery பேப்பர் ஒட்டிவிடும் உங்கள் வரிகள்

//பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள் எதிர்வீட்டு யுவதி இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன் அந்த நாயை // //வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்////வெற்றுவெளியில் காலுதைத்து காற்றில் கரங்களைத் துழாவி முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து////சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள குறிவிறைத்து உயிர்த்துளி கசிய////நினைவு பொல்லாதது எதையும் வைக்காதீர்கள் நினைவில்////கொலுசின் உதிர்ந்த
அறியாது அபகரித்த மாதவிடாய்க் கறை படிந்த துணி// //புணரும் தருணத்தில் நிழலாடும் பிரசவ வலி////நேசிக்கப்படுகிறேன்மூடநம்பிக்கை//
//அந்த நெடுநேர உரையாடல் முடியும் சுயபோகத்தில் //உச்சக்குரலில்
ஒருநாள் உன்னத்தான் கட்டிக்குவேன்னு நிக்கப்போறா விஷம் கக்கினாள் சண்டாளி பொறம்போக்கு பீத்தின்னப்போகுது பார் புத்தி உங்கப்பன்கிட்ட நீ அப்படித்தான் கேட்டயா////எரிந்த பாம்புக்குளிகையின் திக்கில்லாமல் காற்றிலலையும் சாம்பலாய்//உனக்காக சுவாசித்தே உயிர்நீத்த
சிகரெட்////அப்பா அம்மாவின் புருஷன் இத்துனை காலமாய் இதுகூட
தெரியாமலிருந்திருக்கிறது.//உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு செருப்பு பிஞ்சிரும்//

பிறகந்த பேருந்துக்கவிதை.....

கட்டத் துவங்கின வீட்டின் முத்தம் ,கழிவறை முதல் முறை........

நண்பா..!
இந்த வரிகளுக்கிடை உதிர்ந்த சிகரேட்டுத்துண்டுகள்
கசங்கிய திசுக்கோப்பைகள், சுய போகம் ,புணர்ச்சி
அலைவுறும் பயணம் , தனிமையின் வாதை , வாசிப்பு
தமிழுக்கு மாறாத பளோககேரின் எழுத்துக்கள் போல அச்சுக்கு வராமல் அடிக்கப்பட்ட வரிகள் எல்லாம் நிழல் ஆடுகின்றன யாத்ரா..!

எனது ஈமெயில் முகவரி nesamithranonline@gmail.com
உங்கள் விருப்பப் படி pop up window
வழியே கருத்துரைக்க மாற்றங்கள் செய்து விட்டேன்
இனிய நண்பனே !
நன்றி !

butterfly Surya சொன்னது…

அருமை நண்பா.

நமது அடுத்த சந்திப்பு எப்போது? காத்திருக்கிறேன்..??

Nathanjagk சொன்னது…

//என்னில் தன்னை சில கணம்
பார்த்துச் செல்பவர்களுக்கிடையில்
என்னில் வசிக்க விரும்பிய..//
இந்த கண்ணாடி உறவு வியக்க​வைக்கிறது! இனி கண்ணாடிகளைப் பார்க்கும்​போதெல்லாம் இந்த கவிதை நினைவுக்கு வரும். அன்றாடம் காணும் பொருளில் ஒரு இலக்கியப்பிரதி ஒளிந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!

Kumky சொன்னது…

அண்ணா,
இந்த நேசமித்ரன் என்னங்ணா சொல்லவராரு..?
அத மட்டும் எனக்கு ஒரு கோனார் போட்டு அனுப்பிருங்னா.

இந்த கவிதைல பிசிரடிக்குதுங்ணா.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்கிறது
பிறகான தருணங்களில்
உன்னை நெருங்கி கடக்கும் போதெல்லாம்
நீ பார்க்கும் பார்வை //
 
அற்புதம்.

பா.ராஜாராம் சொன்னது…

உங்களுக்கு விருது வழங்கும் தகுதி என்னிடம் இல்லை.ஆனால்,உங்கள் எழுத்தை நேசித்த பிரியத்தை காட்ட வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.நேரம் வாய்க்கிற போது,வீடு வாருங்கள்.நிறைய அன்பும் நன்றியும்!

யாத்ரா சொன்னது…

விதூஷ், அசோக், கார்த்திகைப் பாண்டியன், ஜோ, அகநாழிகை, மதன், ஸ்ரீதர், கார்டின், முத்து, பிரவின்ஸ்கா, நந்தா, வடகரை வேலன், மாதவராஜ், கோகுல், தேனீ, நேசமித்ரன்,உயிரோடை, மிஸஸ் தேவ், வால்பையன், மண்குதிரை, ராஜாராம், இரசிகை, வண்ணத்துப்பூச்சியார்(வெகுசீக்கிரம் நிச்சயம் சந்திப்போம்), ஜெகநாதன், கும்க்கி, உழவன் அனைவருக்கும் மிக்க நன்றி.

TKB காந்தி சொன்னது…

கடைசி வரிகளில் என்ன எழுதியிருப்பிங்கன்னு ஆரம்பத்துலயே தோணினது, அழகா முடிச்சிருக்கீங்க யத்ரா :)