வியாழன், 26 ஜூலை, 2012

இரை

இரையென கொத்துகிறது
சலனமற்ற நீர்ப்பரப்பை
பறவை
அலகு நீர்தொடும் கணத்தில்
தப்பி மறைகிறது இரை
தன் அலகுக்கு
அகப்படாமல்
காலங்காலமாய்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
தன் பிம்பத்துடனான
வேட்டை

8 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா. மறுபடி நிறைய எழுதுங்கள்.

chandru / RVC சொன்னது…

நீ நடத்து மச்சி... waiting 4 more posts :)

இராமசாமி கண்ணன் சொன்னது…

நல்லாயிருக்குங்க யாத்ரா.

ச.முத்துவேல் சொன்னது…

மறுபடியும் பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு யாத்ரா!!!

தொடர்ந்து எழுதவும்.

இதுமாதிரி கவிதை யாத்ராவாலதான் எழுதமுடியும்

Nundhaa சொன்னது…

Welcome back

vel kannan சொன்னது…

மறுபடியும் யாத்ரா , மகிழ்வை தருகிறது நண்பா,இந்த கவிதை : ஓர் சலனமற்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
தொடருங்கள்

இரசிகை சொன்னது…

neenga remba naal kazhichu yezhuthinathai..
naan innum naal kazhichu vaasikiren.
nallaayirukku.
vaazhthukal.

யாழினி சொன்னது…

சந்தோஷமா இருக்கு மறுபடி எழுத ஆரம்பிச்சதுக்கு. அந்த வகையில இந்த கவிதை மிக சிறப்பானது. நிறய அழுத்தம் நிறஞ்ச கவிதை.. இனியும் இனியும் எழுதணும்.