
ப்ரியத்திற்குரிய நண்பர்களுக்கு,
வணக்கம், பிப்ரவரி 2009 முதல் இந்த வலைப்பூவில் எழுதத்துவங்கி இன்றுவரையிலான நிகழ்வுகள் அவற்றின் நினைவுகள் என எல்லாம் எல்லாம் மனதடைத்திருக்கிறது இப்போது, எவ்வளவோ நினைவுகள், துவத்திலிருந்தே இணைய நண்பகளின் உற்சாகமும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் விமர்சனங்களும் வழிகாட்டுதல்களும் தான் இதை சாத்தியப் படுத்தியிருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியையும் ப்ரியங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நெகிழ்வாக உணர்கிறேன்.
இக்கவிதைகளை எழுதிய தருணத்தில் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்தி வாழ்த்தி உற்சாகப்படுத்திய இணைய நண்பர்களுக்கும், வெளியிட்ட உயிரோசை மற்றும் சிக்கிமுக்கி இணைய இதழ்களுக்கும், நவீனவிருட்சம், மணல்வீடு, அகநாழிகை சிற்றிதழ்களுக்கும், பரிசளித்து மகிழ்வூட்டிய உரையாடல் இலக்கிய அமைப்பிற்கும் மிக்க நன்றி.
இந்த தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து மிகச்சிறப்பாக பதிப்பித்திருக்கும் அகநாழிகை பதிப்பகம், அன்பிற்குரிய பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் அன்பும் நன்றியும்.
இவ்வெளியீட்டு விழா அறிவிப்பை தங்கள் தளங்களில் மற்றும் கூகுள் பஸ்களில் வெளியிட்டு வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
நிகழ்விற்கு சிறப்புரை வழங்கி வெளியிட சம்மதித்த திரு. ராஜசுந்தரராஜன் மற்றும் திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
வருகிற புதன்கிழமை 29 டிசம்பர் 2010 அன்று சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலை, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இப்புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
17 கருத்துகள்:
வாழ்த்துக்கள் யாத்ரா.
எப்போதுமே 'முதல்' என்பதில் இருக்கும் சந்தோசமே தனி.
யாத்ரா...
வாழ்த்துகள். தொகுப்பாக வாசிக்கக் காத்திருக்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
மனமார்ந்த வாழ்த்துகள் :))))))
நிறைய புத்தக வெளியீட்டு அறிவிப்புகளை இன்று கண்டேன்.. மகிழ்ச்சி....
வாழ்த்துக்கள் யாத்ரா!! :)
வாழ்த்துகள் யாத்ரா! யாத்திரை தொடரட்டும் :)
வாழ்த்துகள் யாத்ரா.. தலைப்பே மிரட்டுது :)
வாழ்த்துக்கள் யாத்ரா.
வாசிக்கக் காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் அன்புத்தம்பி...
சந்தோஷமாக இருக்கிறது.
மிகுந்த சந்தோசமும் வாழ்த்துகளும் செந்தி!
WOW ... வாழ்த்துகள் யாத்ரா ...
வாழ்த்துகள் நண்பா ....
Congrats man :)
நன்றி செல்வராஜ் ஜெசதீசன்
நன்றி சேரல்
நன்றி கௌரிப்ரியா
நன்றி சுகிர்தா
நன்றி நிலாரசிகன்
நன்றி இராமசாமி
நன்றி கமலேஷ்
மாதவராஜ்ண்ணா நன்றி
பாராண்ணே நன்றி
நன்றி நந்தா
நன்றி வேல்கண்ணன்
நன்றி அசோக்
நண்பர்கள் அனைவரும் விழாக்கு வந்து சிறப்பிக்கனும், நன்றி
வாழ்த்துகள் யாத்ரா... வெளியீட்டு விழாவுக்கு வர முயற்சி செய்கிறேன்.
வாழ்த்துக்கள் யாத்ரா....
வாழ்த்துக்கள்!
அன்பின் யாத்ரா,
செய்தி மிகுந்த மகிழ்வையளிக்கிறது. I am touched! :)
எதிர் வரும் காலங்களில் தமிழ் கவிதைத் தொகுப்புகள் ‘மயிரு’ அளவுக்கு (!) செறிவுடனும், தரமுடனும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வெளிவரும் என்பது என் ஆசை மட்டுமல்ல. நிதர்சனமும் கூட!
கருத்துரையிடுக