புதன், 2 டிசம்பர், 2009

இருப்பு

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது

பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்

திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்

பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்

மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி

அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )

64 கருத்துகள்:

நிலாரசிகன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் யாத்ரா. சில வார்த்தையாடல்கள் மிக அருமை.

//கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை
தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது//

ஒற்றுப்புள்ளிகளின் என்றிருக்க வேண்டுமோ?

இளவட்டம் சொன்னது…

வாவ்! அருமை யாத்ரா.வெகு இயல்பாய் மனம் கல்லறையை நினைக்க தொடங்கி விடுகிறது.

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க யாத்ரா..
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

மண்குதிரை சொன்னது…

நுட்பமான விவரணைகள் நண்பா
வாழ்த்துக்கள்.

Vidhoosh சொன்னது…

எங்க. எங்களுக்கெல்லாம் இனி பரிசில் எங்க. போச்சு போச்சு எல்லாம் போச்சு.

நாங்களா ஒரு கல்லறைக்குள் போய் படுத்துக்க வேண்டியதுதான். இல்லேன்னா சிவராமன் வேறு பட்டறை சிலுவையில் பளாரென்று அறைந்து விடுவார். :))

-வித்யா

Ashok D சொன்னது…

எழுந்து நின்று கைதட்டச்சொல்கிறது உந்தன் கவிதையின் அழகு...

உன் ‘இருப்பு’ மகுடம் சூடும்.

எல்லா வரிகளும் பிடித்துயிருந்தது. நல்ல கவிதை கொடுத்தற்கு நன்றி.

ஜெனோவா சொன்னது…

இது இதுவென்று குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை , விவரணைகளைப் போர்த்தியிருக்கும் எல்லா வரிகளுமே அற்புதம் !

வெற்றிபெற வாழ்த்துகிறேன் !
வாழ்த்துக்கள் .

நந்தாகுமாரன் சொன்னது…

கவிதைப்படுத்தப்பட்ட காட்சிகளின் ரசவாதமும், இருண்மை அழகும் அருமை ... வெற்றி பெற வாழ்த்துகள்

Karthikeyan G சொன்னது…

மிகவும் நல்லா இருக்கு..
Congrats!!!

பா.ராஜாராம் சொன்னது…

அற்புதம் தம்பு!

ரொம்ப பிடிச்சிருக்கு.கண்டிப்பா வெற்றி பெரும்.வாழ்த்துக்கள் யாத்ரா,திருமணத்திற்கும்!

யாத்ரா சொன்னது…

அன்பு நிலா, "ஒற்றுப்புள்ளிகளை" என்ற வரியை

//நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை//

நான் இந்தப் பத்தியோடு வருமாறு எழுதியிருந்தேன், நீங்கள் சேர்த்து வாசித்ததும் நன்றாக இருக்கிறது, நான் எழுதியதன் படி இங்கு பத்தி பிரித்து எழுதியிருக்கிறேன்.

//நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது

பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்

திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்

பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்

மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி

அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்//

நன்றி நிலா

யாத்ரா சொன்னது…

நன்றி இளவட்டம்

நன்றி கமலேஷ்

நன்றி மண்குதிரை

நன்றி வித்யா

நன்றி அசோக்

நன்றி ஜெனோவா

நன்றி நந்தா

நன்றி கார்த்தி

நன்றி பாராண்ணா

கார்க்கிபவா சொன்னது…

என்னவோ போப்பா..

பத்தி பிரித்து போட்டபின் தான் புரிகிறது. மேலே சூப்பர் சொன்னவர்களுக்கெல்லாம் எப்படித்தான் புரிகிறதோ!!!

ஒரு சந்தேகம். முதலிலே பத்தி பிரித்து போடலாமே!!! ஏன் இப்படி குழப்பனும்? அதில் ஏதாவ்து நவீனம் க்கீதா?

:))

யாத்ரா சொன்னது…

நன்றி கார்க்கி :)

இரவுப்பறவை சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க....
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

//நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை
நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது//

யப்பா.......

ரௌத்ரன் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு நண்பா..வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

தேவன் மாயம் சொன்னது…

கவிதை மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது!!

நேசமித்ரன் சொன்னது…

மாப்பிள்ளை சார்

பின்னிட்டீங்க போங்க

வாழ்த்துகள்

விநாயக முருகன் சொன்னது…

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை


இந்த வரிகளை மீண்டும் மீண்டும் ரசித்து படித்தேன். அருமை. வாழ்த்துக்கள் யாத்ரா

Nathanjagk சொன்னது…

நிறைய எழுதியிருந்தேன். நானே அவைகளை நீக்கியும் விட்டேன். ​பெருசாக வருத்தப்பட ​வைக்கும் என்று தோன்றியதால். வந்திருக்கிற பின்னூக்களை படித்தபின்னாடிதான் ​தெரிந்தது இப்போ இது உங்களின் ​கொண்டாட்ட காலம் என்று! Happy Married Life! All the best Yathra!

பூங்குன்றன்.வே சொன்னது…

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

Sugirtha சொன்னது…

ippo dhan padichen. Arpudhamaai irukkiradhu Yathra! Vazhthukkal.Marubadiyum ungal ezhuthai padippadhil pudhiyadhoru malarchi enakku :)

யாத்ரா சொன்னது…

இரவுப்பறவை, ஸ்ரீ, ரௌத்ரன், தேவன் மாயம், நேசமித்ரன், விநாயகமுருகன், பூங்குன்றன், சுகிர்தா எல்லாருக்கும் நன்றி.

நண்பா ஜெகன் உங்களுக்கு ஸபெஷல் நன்றி.

S.A. நவாஸுதீன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

//நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்//

ஆரம்பமே அருமையாய் இருக்கிறது யாத்ரா
வெற்றி பெற வாழ்த்துக்கள்

உயிரோடை சொன்னது…

யாத்ரா வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்

கமலேஷ் சொன்னது…

உங்களோட வலை பூவல ***** அவர்களோடபின்னுட்டத்தை படிச்சேன். அதற்கு சவுக்கு கைல எடுத்த பதிலையும் படிச்சேன்...அந்த ஐந்து நிமிடதுக்குல.....நான் தேடிகிட்டே இருந்த சுயம் எனக்கு கிடைட்சிருசி.....நன்றி... உங்களின் திருமணமான வாழ்க்கை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்....

யாத்ரா சொன்னது…

நவாஸ், தேனம்மை, லாவண்யாக்கா, கமலேஷ் அனைவருக்கும் நன்றி.

சந்தான சங்கர் சொன்னது…

கல்லறையை
படம்பிடித்து இருக்கின்றீர்கள்
அருமையாக...

வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா.

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

நேர்த்தியான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

அந்த நிலவு போல மிக அழகாக இருக்கிறது யாத்ரா. வாழ்த்துக்கள்.

chandru / RVC சொன்னது…

அருமை யாத்ரா..!
ரமேஷ் பிரேமின் ஒரு கவிதையில் வரும் " எப்படி வாய்க்கிறது கல்லறைத்தோட்டங்களின் புற்களுக்கு மட்டும் வாய்க்கிறது இப்படி ஒரு வசீகரம்" என.
நுன்ணிய அவதானிப்பு யாத்ரா,

வெற்றி பெற வாழ்த்துகள்..!

கல்யாணமா... சொல்லவே இல்லை..! :)
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள்

சக்தி..! சொன்னது…

நான் இந்த போட்டியில கலந்துகிட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் எனக்கு புரியுது.! நான் இந்த ஆட்டதுக்கு வரலப்பா..! எப்புடி இப்படியெல்லாம் எழுதுறீங்க..! உக்காந்து யோசிப்பீங்களோ..!

சிவாஜி சங்கர் சொன்னது…

//தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை...//

சொல்லாடல் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

Gowripriya சொன்னது…

பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

hats off

அவனி அரவிந்தன் சொன்னது…

கவிதையைப் படிக்கும் போது காட்சிகள் கண்முன் நிற்கின்றன. படித்து முடித்தும் அகல மறுக்கின்றன. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

விஜய் மகேந்திரன் சொன்னது…

nanraga ullathu kavithai

பூங்குன்றன்.வே சொன்னது…

கவிதை அருமை..கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே சொன்னது…

கவிதையின் ஆரம்பமும்,முடிவும் அசத்தல்.ரொம்ப எளிமையா இருந்தாலும் உணர்வை அழுத்தமாக சொல்கிறது..

ச.முத்துவேல் சொன்னது…

எந்த மூட்ல இருந்தாலும் சரி. யாத்ராவோட கவிதையப் படிக்க ஆரம்பிச்சு மொத சில வரிகளுக்குள்ளேயே, யாத்ரா கவிதைக்குன்னு ஒரு மூட் இருக்கே, அதுக்குள்ள போயிடக்கூடிய ஒரு ஆச்சரியம் இந்தக் கவிதையிலும் இருக்குது.

இதில் நீங்கள் காட்டுகிற புற உலகம் நான் இதுவரை வேறெங்கும் படிக்காதவை.படிமங்களின் அடுக்குகள்.

இக் கவிதை தரும் உணர்வு அமைதியடையச்செய்துவிடுகிறது.

வாழுத்துக்கள் கவிஞனே!

ச.முத்துவேல் சொன்னது…

பத்திகளாகப் பிரித்து எழுதுவதையே வரவேற்பவன் நான்.சில சமயங்களில் பத்தி பிரிக்க நேர்கிற இடத்திலிருக்கும் வரி,அடுத்த பத்திக்கு சேர்த்து வாசிக்கும்போது ஒரு மாதிரியும், முந்தின பத்தியோடு சேர்த்து வாசிக்கும்போதும் பொருள் தருவதாகவும் இருக்கும்போது் , அவற்றை சேர்த்து எழுதலாம் என்பது என் நிலை.உதாரணத்திற்கு சட்டென மனுஷின் ஒரு கவிதையும், அய்யப்பமாதவனின் ஒரு கவிதயும் நினைவு வருகிறது.

butterfly Surya சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா.

hemikrish சொன்னது…

நீங்கள் யாரென்று தெரியாது....நான்கு நாட்கள் முன்னே இந்த கவிதையை படித்து விட்டு என் மனதில் ஆழமாய் பதிந்தும் விட்டது...அவசரத்தில் உங்கள் கவிதைக்கு comment கொடுக்க முடியவில்லை.அது தலைப்பையும் பெயரையும் மறந்து விட்டேன்...இன்றுஇப்பொழுது அதை மறுபடியும் தேடி கண்டுபிடித்தேன்.உங்கள் கவிதைக்கு இத்தனை comments என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.....அப்போதுஅதை நான் பார்க்கவே இல்லை...மிக மிக அருமை...all d vey best....

ரா.கிரிதரன் சொன்னது…

மிக நல்ல கவிதை. நன்றாக இருந்தது.சமீபத்தில் படித்த நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்று (உயிரோடை லாவண்யா மற்றொன்று)என் தளத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி.
http://beyondwords.typepad.com/beyond-words/2009/12/books_poetry.html

ny சொன்னது…

கொஞ்சம் லேட்டா வந்துட்டதால...
ரெண்டு மூன்று வாழ்த்துக்கள் உங்களுக்கு :)

Unknown சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் யாத்ரா..

Senthilkumar சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் யாத்ரா. வார்த்தைகள் மிக அருமை.

இரவுப்பறவை சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கொஞ்சம் தாமதமாயிருச்சு

யாழினி சொன்னது…

மிக அருமை

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க யாத்ரா..


வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அருமை யாத்ரா

வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

பத்மா சொன்னது…

ஒரு கல்லறைத் திருநாளில் மலர் சூடா ஒரு சிலுவை புதைக்கப் பட்ட மண்குவியலை கண்டு யர்ரோ என்ற கேள்விக்கு பதில் அறியாமல் தூக்கம் தொலைத்தது உண்டு.இன்றும் நான் தூங்கமாட்டேன்
வாழ்த்துக்கள்
பத்மா

adhiran சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா. கல்யாணத்துக்கும் கவிதைக்கும்.

யாழினி சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் யாத்ரா!!!!!


நல்லா எழுதி இருக்கீங்க.......

"உழவன்" "Uzhavan" சொன்னது…

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் சொன்னது…

வெற்றிக்க் பெற்றமைக்கு வாழ்த்துகள் தம்பு! :-)

Ashok D சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் யாத்ரா :)

ஜெனோவா சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா ! :)

Ganesh Gopalasubramanian சொன்னது…

வெற்றிக்கரங்களுக்கு வாழ்த்துகள்!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

கமலேஷ் சொன்னது…

வெற்றி பெற்றது வாழ்த்துக்கள் தோழரே..தொடருங்கள் கவிதை பயணங்களை...

இரவுப்பறவை சொன்னது…

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

கவிநா... சொன்னது…

வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

M.Rishan Shareef சொன்னது…

வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)