திங்கள், 29 மார்ச், 2010

நானும் அவனும்

துயரத்தின் ரேகை படர்ந்து
முகம் துவண்டு
இன்னும் சற்றைக்கெல்லாம்
தளும்பிவிடும் விழிகளுடன்
என் முன்னால்
நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை
அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்
ஏனோ முத்தமிடத்தோன்றியது
அவன் கன்னத்தில்
இதழ்குவித்து
அவன் கன்னத்தை நெருங்க
அதற்குள் அவன்
உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்
என் உதடுகளில்
அல்லது
என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா

19 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

குறி தவறிவிட்டதா

இங்கு துவங்கிறது கவிதை

யாத்ரா பரிணமிக்கிறது யாத்திரைக் குறிப்புகளின் லிபி

Vidhoosh சொன்னது…

சண்டை போட ஆரம்பிச்சாச்சு போலருக்கே.. :))

கவிதை அருமை. :)

:) கல்யாணத்துக்கப்புறம் எங்க ஆளையே காணோமேன்னு பாத்தேன். கல்யாண போட்டோவெல்லாம் எங்க? பிகாசாவில் கொஞ்சம் அப்லோட் செஞ்சு லிங்க் அனுப்புங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அட....

இது யாத்ராவுடைய கவிதை இல்லை... :)

நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்...

சும்ம்மா விளையாட்டுக்கு நண்பா....கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லாயிருக்கு யாத்ரா.

Ashok D சொன்னது…

:)

பனித்துளி சங்கர் சொன்னது…

///என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா//

சந்தோசமா ??வருத்தமா??
அருமையான கவிதை

ரௌத்ரன் சொன்னது…

நல்ல கவிதை யாத்ரா...

மரா சொன்னது…

நல்லயிருக்கு புதுமாப்ள!

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு செந்தி.

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

நல்லாருக்கு யாத்ரா.

பிரவின்ஸ்கா சொன்னது…

அருமை..
- பிரவின்ஸ்கா

Li. சொன்னது…

ஒற்றைத் தோப்புகளாய் போன நம் தலைமுறைக்கு கண்ணாடிதான் ஆறுதல்.. கண்ணாடியுள் அழும் நமக்கும் நாமேதான் அரவணைப்பு..

Thamira சொன்னது…

செமத்தியான கவிதை. அட்டகாசம் பண்ணியிருக்கீங்க..

எழுதப்படாத கவிதைகள் இன்னும் கோடி இருக்கின்றன என்ற நம்பிக்கை இது போன்ற கவிதைகளைப் பார்க்கையில்தான் வருகிறது.

chandru / RVC சொன்னது…

நல்லாயிருக்கு யாத்ரா...!

Karthikeyan G சொன்னது…

fine sir...

அகநாழிகை சொன்னது…

ம்ம்

:(

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பிரவின்ஸ்கா சொன்னது…

அருமை ..

தமிழ்நதி சொன்னது…

பின்னூட்டமிட்ட நண்பர்களின் தகவலிலிருந்து.... கண்ணாடியை இனி விட்டுவைக்கலாம் அல்லவா:)

கவிதை எப்போதும்போல நன்றாக இருக்கிறது.