திங்கள், 22 ஜூன், 2009

தரை


கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.

25 கருத்துகள்:

Venkatesh Kumaravel சொன்னது…

அமேஸிங்.
காட்சிகள் விரியும் தன்மை எனக்கு மிகப்பிடித்த உத்தி. பேங் ஆன்!

Deepa சொன்னது…

அற்புதமான உருவகம்!

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
ஒரு சந்திப்பு, இன்றைய நாட்குறிப்பு, தரை மூன்றுக்குமான எனது பகிர்வு இது. தற்செயல் பற்றி நகுலன் கூறியது குறித்து நாம் பேசியிருந்தோம். தற்செயல் நிகழ்வுகள் அனைத்துமே தற்செயலானவை அல்ல என்பதே அது. மற்றுமொரு தற்செயல் நினைவிற்காக காத்து ஏங்கிக் கிடக்கின்ற மனம் உனக்கு இப்போது. ‘ஒரு சந்திப்பு‘ கவிதை மிகவும் அருமை. வாழ்வைப் பகிர்தல் என்பது உனது கவிதைகளின் வாயிலாக உணர்கிறேன். தேர்வுகளின் காரணமாக எதுவுமே வாசிக்காமலும், எழுதாமலும் இருந்தும் உனக்காகவே எனது அன்புப் பகிர்வாக இதைத் தருகிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் சொன்னது…

கவிஞனுக்கு காணும் எல்லாவற்றிலிருந்துமே கவிதை எழுதமுடியும். கவிதை எங்கும் நிறைந்திருக்கிறது.அதற்குரிய மனோ நிலைதான் அமையவேண்டும்.

தற்காலிகத் தரை ஈரத்தையே எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்.தரை முழுதும் தெளீவான தண்ணீரே நிரம்பி, எப்போதும் ஈரமாகவே வைத்திருக்கும் நிலை வரும்.

பிரவின்ஸ்கா சொன்னது…

கவிதை அருமை .
ரொம்ப பிடிச்சிருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Thamira சொன்னது…

மிக நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகிறீர்கள்.!

Sugirtha சொன்னது…

நல்ல கவிதை யாத்ரா. மனதை தொலைத்து கொண்டு வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் தருணங்களை அழகாய் கவிதை படுத்தி இருக்கிறீர்கள்.

Ashok D சொன்னது…

யாத்ரா.. U r in full form.. அடிச்சு விளாசுங்க..

நந்தாகுமாரன் சொன்னது…

hmmm ... this is something ...

ஆ.சுதா சொன்னது…

அற்புதமான கவிதை

காமராஜ் சொன்னது…

உலர உலர சித்திரம் மாறுகிற
படிமம் மிகமிக அருமை

ரகசிய சிநேகிதி சொன்னது…

"இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்."
உணர்கிறேன் ..வெறுமை மிகுந்த வரிகளின் வலியை...

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

ரகசிய சிநேகிதி கூறியது...
"இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்."
உணர்கிறேன் ..வெறுமை மிகுந்த வரிகளின் வலியை...


வழிமொழிகிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா!

மாதவராஜ் சொன்னது…

கவிஞனே!
வாழ்த்துக்கள்.
அற்புதமான சித்திரம்...
நல்லா இருக்கு.

//மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்//

இதில் ’உலர்ந்த நானும்’ என்பதற்கு பதிலாக ’நானும்’ என்று இருந்தாலே போதுமானதே!

மதன் சொன்னது…

நான் மட்டும் விதிவிலக்கல்ல.. எனக்கும் மிகப் பிடித்தது! :)

anujanya சொன்னது…

ஆஹா, அருமை யாத்ரா. எவ்வளவு எளிமை! அதே சமயம் எவ்வளவு பிரமாதம்!

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

வெங்கிராஜா, தீபா, வாசு, முத்துவேல், பிரவின்ஸ்கா, ஆதி, சுகிர்தா, அசோக், நந்தா, முத்து, காமராஜ், மேகா, அமித்து அம்மா, ஜ்யோவ்ராம் சுந்தர், மாதவராஜ்( நீங்கள் குறிப்பிட்டது மிகச்சரியே, மிக்க நன்றி), மதன், அனுஜன்யா அனைவருக்கும் என் நன்றிகள்.

Vaa.Manikandan சொன்னது…

காட்சி துல்லியப்படுத்தப்பட்டிருக்கும் இக்கவிதை எனக்கு பிடித்திருக்கிறது.

உயிரோடை சொன்னது…

மிக‌ அருமையாக‌ எழுதி நீண்ட‌ விம‌ர்ச‌ன‌ம் இட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்துக்கு உள்ளாக்கிய‌ குற்ற‌த்திற்காக‌ விம‌ர்ச‌ன‌ம் வார‌ இறுதிக்கு ஒத்தி வைக்க‌ ப‌டுகின்ற‌து. :)

ப‌டிம‌ க‌விதையை இவ்வ‌ள‌வு எளிமையா.... ம்ம்ம் யாத்ரா பொறாமையா இருக்கு என‌க்கு ஏன் இப்ப‌டி எழுத‌ வ‌ர‌ மாட்டேன்கிது.

யாத்ரா சொன்னது…

நன்றி மணிகண்டன்
நன்றி லாவண்யாக்கா

மாதங்கி சொன்னது…

கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது

லிங்காபுரம் சிவா சொன்னது…

i love this kavithai

ரா.கிரிதரன் சொன்னது…

நல்ல கவிதை. என் சமீபத்திய பதிவில் இதைப் பற்றி எழுதியுள்ளேன்.

நன்றி.

பா.ராஜாராம் சொன்னது…

பேராச்சரியம் யாத்ரா நீ!