செவ்வாய், 3 மார்ச், 2009

பூர்வீக ஊர்

பூர்வீக ஊர்

பூர்வீக ஊருக்கு சென்றிருந்தேன்
சுற்றுக்கட்டு வீடுகள்
நவீன மோஸ்தரில் மாற்றியமைக்கப்பட்டு
வயல் பம்புசெட்டு வெறுமையாய்
கழிந்து கழுவும் குளம் நீரற்று
கிரிக்கெட் மைதானம் காணாமல் போய்
கோலி பம்பரம் கில்லி கள்ளன்போலிஸ்
விளையாடும் பிள்ளைகள் தொலைந்து
ஊர்பெருசுகள் தர்மகர்த்தா உட்பட போய்சேர்ந்து
கல்பனா இளவரசுவையும்
பானு இளங்கோவையும்
காதலித்து மணமுடித்து
பாபு சத்யா கோகிலா மருந்து குடித்து இறந்து
அஞ்சலி மட்டும் பிழைத்து
அந்த பாட்டி இறந்தபிறகு
கணபதி தாத்தா மறுமணம் முடித்து
எதிர்வீட்டு தேவசேனா அக்காவுக்கு விவாகரத்தாகி
சகுந்தலை அக்கா பாண்டியனோடு ஓடிப்போய்
சிவபாதம் அண்ணன் காணாமல் போய்
கண்ணன் பிரம்மச்சாரியாய்
கதை நீண்டு கொண்டேயிருந்தது
தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்,

2 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

எல்லாக் கிராமங்களிலும் 'தெய்வானை'கள் இருப்பார்கள். மறந்துபோன யாத்ராக்களை நினைத்துக்கொண்டு:)

யாத்ரா சொன்னது…

நம்மைப் பற்றிய சில உண்மைகள் ஜீரணிக்க முடியாததாய் தான் இருக்கு,

தமிழ்நதி தங்களின் வருகைக்கு நன்றி