சனி, 31 ஜூலை, 2010

எப்டியிருக்கீங்க

மணவாழ்க்கை எப்டியிருக்கு
விஷேஷம் ஏதாவது
தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும்
வீட்ல எப்டியிருக்காங்க
ஆடிமாசம் கொலபட்னியா
புரிதல் எப்டியிருக்கு
புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும்
குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா
சிகரெட்டாவாது பிடிக்கலாமா
என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா
வீட்ல எங்க ஊருக்கா
பொண்டாட்டி கால் பண்றாங்களா
வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு
புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல
பொண்டாட்டி சமையலா
தலைதீபாவளி வாழ்த்துகள்
போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை
புன்னகையோடு கடந்துவிடுகிறேன்
நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்
விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி
ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள்
முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின்
பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை
ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை
கறை படிந்த உள்ளாடை வேட்டி
சுகித்த மெத்தை சீதனங்கள்
மோதிரம் அணிந்திருந்த மெட்டி
நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி
வரவேற்பறையில் நின்றபடி
நண்பர்கள் உறவினர்களோடு நின்றபடி கைகோர்த்து திரும்பிப்பார்த்தபடி
என் காதலிகளுடன் நின்றபடி
அவள் காதலர்களுடன் நின்றபடி
முதுகுகளில் சாய்ந்தபடி
உணவுமேசையில் ஊட்டியபடி
மெட்டியணிவித்தபடி மாலைமாற்றியபடி
மாங்கல்ய முடிச்சிட்டபடி தலைசுற்றி திலகமிட்டபடி
யாரையோ பார்த்து சிரித்தபடி தோளில் சாய்ந்தபடி
நெற்றிசரியுமவள் முன்கேசம் ஒதுக்கியபடி
கழுத்தில் கைகோர்த்தபடி
பரிசுப்பொருட்களை பெற்றபடி
யாகநெருப்புக்கு நெய்வார்த்தபடி
குட்டிப்பிள்ளையாரை தொட்டிலாட்டியபடி
பாதபூசை செய்தபடி பொறிமோதிரம் அணிவித்தபடி
நீர்க்குடத்தில் மோதிரம் துழாவியபடியிருக்கும்
இறந்த கணங்களின் பிணக்குவியலான ஆல்பம்
சங்கத்தில் பாடாத கவிதை ஆயிரம் மலர்களே மலருங்கள்
ராஜாமகள் ரோஜாமலர் கோடைகாலகாற்றே குளிர் தென்றல் பாடும்பாட்டே
ராஜராஜசோழன் நான் என் இனிய பொன்நிலாவே
பூவண்ணம் போலநெஞ்சம் ஓ வசந்தராஜா தேன்சுமந்த ரோஜா
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
பொத்திவச்ச மல்லிகமொட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
ஆனந்த ராகம் கேட்கும்காலம் கீழ்வானிலே
அழகிய கண்ணே உறவுகள் நீயே
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்
கொடியிலே மல்லிகப்பூ ஆத்தாடி பாவாட காத்தாட
மதுர மரிக்கொழுந்து வாசம் மேகங்கருக்கையிலே தேகங்குளிருதடி
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
புத்தம்புது காலை பொன்னிறவேளை
பூங்காவியம் பேசும் ஓவியம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
தம்தனதம்தன தாளம் வரும் புதுராகம் வரும்
தேவதை போலொரு பெண்ணிங்கு வந்த்து நம்பி
மெட்டியொலி காத்தோடு என் நெஞ்சை தாலாட்ட
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன்
உறவெனும் புதியவானில் பறந்ததே இதய மோகம்
வெள்ளிக்கொலுசுமணி வேலான கண்ணுமணி
சிறுபொன்மணியசையும் அதில் தெறிக்கும் புதுஇசையும்
ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா தேவதையே திருமகளே
பூங்கதவே தாழ்திறவாய் பூவாய் பெண்பாவாய்
ஒருகிளி உருகுது உரிமையில் ப்ழகுது ஓ மைனா மைனா
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவர நெனக்கலயே
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும்நேரம்
மணநிகழ்வின் காட்சிகளுக்கு பொருத்தமாய் கோர்க்கப்பட்ட
மூன்றுமணிநேர மூன்று குறுந்தகடுகளை
கணினியில் அலைபேசியில் சேமித்திருந்த நிழற்படங்கள்
அலைபேசியெண்ணை எண்களை
அவ்வப்போது தட்டுப்படும் அழைப்பிதழ்கள் வாழ்த்தட்டைகள்
பெயர் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள்
போல்டரில் சேமித்திருந்த வாழ்த்து மின்னஞ்சல்கள்
தூர நண்பர்களுக்கு பகிர்ந்த பிகாசா புகைப்படங்கள்
சுவரில் அலமாரியில் மேசையில் டிவிமேல்
சமையலைறையில் உணவு மேசையில் இருந்த அன்பளிப்புகள்
அன்பளிப்பு விவரங்களடங்கிய நோட்டு
அழைப்பிதழ் கொடுக்க தயாரித்த பட்டியல்
மாமா எழுதி வைத்திருந்த பார்க்கச்சென்ற
முதல் நாள் டிராவல் செலவுமுதல்
சத்திரச்செலவு வரையிலான கணக்குடைரி
சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது
இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்
முதலில் சந்தித்த கோயில் நிச்சயம் மணம் நிகழ்ந்த மண்டபம்
அழைத்துச்சென்ற மருத்துவனை சினிமா தியேட்டர்
பூ வாங்கும் கடை ஒரேமுறை நேப்கின் வாங்கிய கடை
இருக்கும் வீதி சாலை வழி கவனமாக தவிர்க்கிறேன்
பின்னால் இருத்தி அழைத்துச்சென்ற இருசக்கரவாகனத்தை
கல்லாலடித்து உடைத்துவிட்டேன்
நின்ற அமர்ந்த இடம் கோலம் நடந்த தடம் சுமந்த
அனைத்தையும் நீங்கி வந்துவிட்டேன்
சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும்
என்ன செய்வது
பரிமாறப்பட்ட வார்த்தைகள் பார்வைகள் புன்னகைகள் வசைகள் சம்பவங்கள்
பூச்சிகளாய் பறக்கும் மனதை
கூந்தல் கோதியிபடியிருந்த விரல்களை
தழுவிய கரங்களை அணைத்து புரண்டுருண்ட அங்கங்களை
சுவைத்த நாக்கை ஊர்ந்த உதடுகளை
புணர்ந்த குறியை

30 கருத்துகள்:

க ரா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
க ரா சொன்னது…

கவிதையின் கணம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் இன்னும் பல மணி துளிகளுக்கு.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

பெயரில்லா சொன்னது…

யாத்ரா,

வயது தந்த உரிமை காரணம், “பின்னிட்டடா செந்தில்” என்று சொல்லி உன்னை உச்சி முகர விழைகிறேன்.

வெறும் சிமெண்ட் தரையிலேயே சிறந்த கவிதை ப்டைத்தவன் நீ. வாழ்க்கையை அது புரட்டிப் போட்டவைகளை இத்தனை சிறந்த கவிதையாகப் படைத்த உன்னை என்ன சொல்லிப் பாராட்ட?

இதுவரை நீ எழுதியவைகளிலேயே ஆகச் சிறந்தது என இதைச் சொல்வேன்.

நேசமித்ரன் சொன்னது…

யாத்ரா

மரணத் தருணத்தில் உயிர் வெளியேற திறந்து மூடும் உதடுகள்
பதைக்கும் இருதயம் யாவும் காணத்தருவது மிக நேசித்த உயிராய் இருக்கும் பட்சத்தில்

அறுத்துக் கொண்டே கிடக்கும் கடைசி வரை நெஞ்சுக்குழியில் அப்படியான வரிகள் இவையெனக்கு

ச.முத்துவேல் சொன்னது…

யாத்ரா!

Ashok D சொன்னது…

இப்படியோரு ’நடந்ததை’ வார்த்து வைத்துயிருக்கிறேன்... டைப்படிக்கத்தான் நேரமில்லை... போட்டிக்காக நாளை பதிவிட முயற்சிக்கிறேன்...

வாழ்வை சொல்லி நகர்தலே கவிதை.. அல்லது வாழ்வின் புதிர்தன்மையே.... :)

rajasundararajan சொன்னது…

இக் கவிதையும் இதற்கான கச்சாப்பொருட் தேர்வும் அருமை அருமை என அளவுக்கு மீறிப் பாராட்டினாலும் தகும். பாராட்டுகிறேன்.

//சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது// //முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்// //சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும் என்ன செய்வது//

தொடர்புடைய அனைத்திலும் அடையாள எச்சம் தொடருமால், சாவும் முக்தி தராது. ஆகவே, //சாவதற்கும் சாமர்த்தியம் வேண்டும்// என்பதில் படிவிக்கப்பட்டதொரு மூளைநிழல் பூச்சாண்டி காட்டுகிறது. ஆனால் இங்கு அதுவல்ல, அதையும் தாண்டி நிற்கிறது சிக்கல்.

When the arm grows tired the sword must fall. ஆகாது என்றால், அது வேறொன்றும் இல்லை காதல்.

பனித்துளி சங்கர் சொன்னது…

கவிதை என்று நினைப்பதை எல்லாம் எழுதிவிடலாம் . ஆனால் வாழ்வினை முழுவதும் எழுதுவது என்பது வாழ்ந்துகொண்டுதான் இயலும் . வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் உணர்வுகள் கசிகிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி

nila சொன்னது…

//சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும் என்ன செய்வது//
நச்......... அத்தனையும் அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் யாத்ரா

MSK / Saravana சொன்னது…

யாத்ரா, என்ன சொல்ல.. நெஞ்சடைக்கிறது..

பா.ராஜாராம் சொன்னது…

செந்தீ?

Mohan சொன்னது…

வ‌லி மிகு வாழ்க்கையை வார்த்தைகளில் அழகாக சாத்தியப்படுத்தியிருக்கிறது உங்களின் கவிதை!

யாத்ரா சொன்னது…

இராமசாமி கண்ணன், ராம்ஜி நன்றி

நெகிழ்வாக உணர்கிறேன்,ரொம்ப நன்றி அண்ணாச்சி

என்ன சொல்ல நண்பா, நேசா உங்க உணர்வுப் பகிர்தலுக்கு மிக்க நன்றி

முத்து,,,,,,,,,,,,,,,,நண்பா,,,,,,
எனக்கு இப்போ பாடனும் போல இருக்கு, நாம எப்பவும் பாடுவமே அந்த பாட்டை இப்ப நெனச்சிக்கறேன்,,,,

அசோக் பதிவிடுங்கள், நன்றி

ராஜசுந்தரராஜன் சார் வணக்கம், உங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது, நான் உங்களின் ரசிகன்.சில கவிதைத் தொகுதிகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன், அப்படி முகவீதியும் எனக்கு.

http://yathrigan-yathra.blogspot.com/2009/10/blog-post_5490.html

நான் வியக்கும் மிகவும் நேசிக்கும் உங்களிடமிருந்து கிடைத்த இச்சொற்களில் நெகிழ்ந்திருக்கிறேன். மிக்க நன்றி.

சங்கர், நிலா நன்றி

சரா,,,,,,,

பாராண்ணே,,,,,,,

மோகன் நன்றி

அகநாழிகை சொன்னது…

யாத்ரா :(

இளங்கோ கிருஷ்ணன் சொன்னது…

எழுதக்கூடாத நல்ல கவிதைகளை எழுதும் வாழ்வு நேர்வது குறித்து என்ன சொல்ல நண்பா.

மாதவராஜ் சொன்னது…

அன்புத்தம்பி யாத்ரா!

இப்போதுதான் படித்தேன்.

மூச்சு முட்டுகிறது. மீளமுடியாமல் இருக்கிறேன்.....

Unknown சொன்னது…

!!!!!!!!!!!!!!!!

Unknown சொன்னது…

அருமை யாத்ரா.

rvelkannan சொன்னது…

அருமை யாத்ரா.

Karthikeyan G சொன்னது…

இந்த கவிதை படு அட்டகாசம்!!!

கமெண்ட் போடவேண்டும் என பலமுறை வந்து சும்மா சென்றுவிட்டேன்..
ஏனென தெரியல..

Priya சொன்னது…

உங்களின் கவிதை அருமை!

பெயரில்லா சொன்னது…

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

தமிழ்நதி சொன்னது…

ஒரு கேள்வி நாக்குநுனி வரை வந்து உன்னுகிறது. ஆனாலும் நாகரிகம் கருதி கேட்கமாட்டேன். காட்சிகளாக விரிந்த கவிதை.

சி. சரவணகார்த்திகேயன் சொன்னது…

நீண்ட நாட்களாகவே உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் (என் தளத்தில் வெளியிட்டு வரும் படித்தது / பிடித்தது தொடரில் உங்கள் கவிதையையும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கமும் அதில் உண்டு). ஆனால் இதுவரையிலும் உங்கள் கவிதையின் உயரத்துக்கும் என் ரசனையின் உயர‌த்துக்குமான இடைவெளி காரணமாக (பெரும்பாலும் முன்னது உயர்ந்தாய் இருந்திருக்கக்கூடும் என்றே படுகிறது) எப்போதும் அவை எனக்கு முழுமையான உவப்பை அளித்ததில்லை. இம்முறை இரண்டுமே ஏதோவொரு சூட்சமப்புள்ளியில் சந்தித்திருப்பதாகவே உணர்கிறேன். (இடையில் வரும் திரைப்படப்பாடல்களின் பட்டியல் மற்ரும் தேவைக்கதிகமாய் நீண்டு விட்டதாய்த் தோன்றினாலும்) மிக அருமையான கவிதை. சந்தோஷங்கள் & வாழ்த்துக்கள்! நன்று.

நன்றாயிருப்பதை 'நன்று' என்ற வார்த்தையைக் கொண்டல்லாமல் வேறெப்படிச் சொல்வது!

படித்தது / பிடித்தது - 86
http://www.writercsk.com/2010/09/86.html

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

நிஜமாக வார்த்தையே வரவில்லை.
மிக அதிகமான தாக்கம் உங்கள் கவிதையின் வெற்றி. என்னால் "மறக்க முடியாத" கவிதைகளில் இதுவும் ஒன்று.

நிச்சயமாக.

பெயரில்லா சொன்னது…

5 important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html


Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

பெயரில்லா சொன்னது…

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

ராகவன் சொன்னது…

அன்பு யாத்ரா,

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... இது போன்று எழுத சிலரால் மட்டுமே முடிகிறது... வடிவமும், கருப்படுபொருளும் கடலைச்சட்டியில் வறுபடும் மணலாய் தகிக்கிறது யாத்ரா...

அன்புடன்
ராகவன்

நளன் சொன்னது…

painful.