திங்கள், 23 நவம்பர், 2009

இக்கணம்

தத்தளித்து
கால்துடுப்புகளசைத்து
கரையேற
எவ்வளவு முயற்சித்தும்
மூழ்கும் தருவாயிலிருக்கிறது
அத்தனை கால்களிருந்தும்
மரத்தினின்று
இடறி விழுந்த
கம்பளிப் பூச்சி
தான் மரண விளிம்பாகிவிட்ட
தவிப்பில் தன்னொரு உள்ளங்கையை
உதிர்த்தது அந்தக் கரையோரத்தரு
மழைத்துளிகள் குத்திப் புதையும்
புள்ளியினின்று
விரியும் வட்டங்கள்
ஒன்றையொன்று முத்தமிட்டு
மடிகின்றன
காற்றின் சுழிப்பில்
அவ்விலையைப் பூச்சி
பூச்சியை இலை
மாறி மாறி துரத்தியும்
எதிரெதிர்த் திசையில்
செல்ல நேர்ந்தும் என
தீராத அலைக்கழிப்பின் இறுதியில்
வெகு அருகில்
வீழ்ந்த மற்றொரு இலை
விளிம்பைப் பற்றி
ஏறியது பூச்சி
கரை
பரந்த நீர்வெளி தொடு வான்
இப்புறமிருக்கும் நீர்நடு தனிப்பாறை
என எல்லா திசைகளிலும்
சிறுசிறு தூரம்
சென்று சலித்துக் களைத்து
நிலைத்து தவழ்ந்து கொண்டிருக்கிறது
மென்னலைகளின் சீரான லயத்தில்
இலை மேல் ரயில்

19 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

மனசுணர்த்தும் கவிதை.

போய் கொண்டிருக்கவேணும் தம்பு.கை கொள்ள இயலாத கவிதைகளை மென் நகையில்,மென்று விழுங்கியபடி....

வாழ்வு, இன்னொரு ப்ரியமென புரியும். புரியும் போது...

சிரிக்கலாம்...வாழ்வை பார்த்து.

கண்கலங்குகிறது.. உங்கள் கூட இருக்க முடியாத தவிப்பு ஒன்றுக்காக மட்டும்.

போய் கொண்டிருங்கள் செந்தி..

மிக அருமையான கவிதை.

Vidhoosh சொன்னது…

////வீழ்ந்த மற்றொரு இலை
விளிம்பைப் பற்றி
ஏறியது பூச்சி///

அதான் அப்படித்தான்... :))

--வித்யா

இளவட்டம் சொன்னது…

///மழைத்துளிகள் குத்திப் புதையும்
புள்ளியினின்று
விரியும் வட்டங்கள்
ஒன்றையொன்று முத்தமிட்டு
மடிகின்றன///

ரசனை மிக்க வரிகள் யாத்ரா.
அனுபவித்து எழுதி இருக்கிறிர்கள் போலிருக்கு?

Ashok D சொன்னது…

அருமை நண்பனே.. நீ கொடுக்கும் சுவாசம் சுகம் இக்கணம் :)

மண்குதிரை சொன்னது…

arumai yaathra

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

யப்பா! எவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்க...

நல்லா இருக்கு யாத்ரா.

இரவுப்பறவை சொன்னது…

கம்பளிப்பூச்சி அழகாய் இருக்கிறது....

ச.முத்துவேல் சொன்னது…

welcome back yathra. அலாதியான படிமம்.
/தன்னொரு உள்ளங்கையை/
/மழைத்துளிகள் குத்திப் புதையும் /


கவித்துவம் அசத்துகிறது.இந்த இரயிலை மெல்லிய லயத்திற்கு அசைத்துக்கொண்டிருக்கும் அந்த இலைக்கு நன்றி சொல்லவேண்டும்..மீட்டெடுத்ததற்கு. வாழ்த்துகள்.

யாத்ரா சொன்னது…

அன்பு பாரா ண்ணா, நீங்க எப்பவும் என் கூடவே தான் இருக்கீங்க, நன்றிண்ணா.

நன்றி வித்யா :)

நன்றி இளவட்டம்

நன்றி அசோக் :)

நன்றி மண்குதிரை

ஆமாம் சார்,இப்பல்லாம் எப்பவாவது தான் வருது :) நன்றி சுநதர் சார்

நன்றி இரவுப்பறவை

நன்றி முத்து :)

Unknown சொன்னது…

Clasic.

TKB காந்தி சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சி யாத்ரா டச் :)

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

அருமை யாத்ரா.

நந்தாகுமாரன் சொன்னது…

மிகப் பிரம்மாதம் !

RaGhaV சொன்னது…

நர்சிம் அவர்களின் பதிவில் இன்பமான செய்தியை படித்தேன்.. வாழ்த்துக்கள்.. :-)))

Thamira சொன்னது…

சிறப்பான கவிதை.

(கம்பளிப்பூச்சியா? ரயில் பூச்சியா? ஏதாவது ஒண்ணுதான் சொல்லணும். :-) அதென்ன ரெண்டையும் சொல்றது?)

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா

யாத்ரா சொன்னது…

நன்றி கௌரிஷங்கர்

நன்றி காந்தி

நன்றி ஸ்ரீ

நன்றி நந்தா

நன்றி ராகவ்

நன்றி ஆதி ( அது கம்பளிப் பூச்சியாயிருந்து ரயிலாக மாறியது அதனால் :) )

நன்றி அமித்து அம்மா

சந்தான சங்கர் சொன்னது…

மழைத்துளிகள் குத்திப் புதையும்
புள்ளியினின்று
விரியும் வட்டங்கள்
ஒன்றையொன்று முத்தமிட்டு
மடிகின்றன//

அருமை யாத்ரா.

chandru / RVC சொன்னது…

நல்லா இருக்குனு சொல்றது சம்பிரதாயம் நண்பா. :)