செவ்வாய், 5 மே, 2009

இதுவும் கடந்து போகும்



அணிந்திருந்த புதுச்சுரிதார்
புருவச் செதுக்கல்கள்
கத்தரித்த கன்டிஷனர் சிகையலங்காரம்
அழகு நிலையத்திற்குப் பின்னான முகப்பொலிவு
தழையத் தழையச் சூடிவரும் மல்லிகைச்சரம்
கொலுசொலியுடன் கூடிய புடவைச் சரசரப்பு
குதிகாலுயர்ந்த பாதுகை
அலைபேசி சினுங்கல்களின் அழகு
ஓவியக் கையெழுத்து
மின்மடலின் சொற்பிரயோகங்கள்
புன்னகைகளின் அர்த்த அகராதி
உடல்மொழி புரிதல்கள்
மூன்று நாள் காலங்கள்
காதல் நட்பு உறவுகள்
கவிதை ஓவியம் இலக்கியம் தத்துவம்
விருப்பப் பட்டியல்கள்
Intellectual hypocrite pervert isms
இன்னும் பிற எழவுகளைப் பற்றியெல்லாம்
உரையாடிய ஒரு தருணத்திலாவது
பாவனையாகவேணும் அசௌகர்யமாக
உணர்வதாக அபிநயித்திருக்கிலாம்
புன்னகை தவிர்த்து
குறைந்தபட்சம் என்
பிறந்த நாள் பரிசுகளையாவது
நிராகரித்திருக்கலாம்
வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
வாங்கித்தரச் சொன்ன மாத்திரைகளுக்காக
மருந்தகத்தில் நின்றிருக்கையில்

15 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

தன்னை அறிவானவனாகவும், குற்றமற்றவனாகவும் காட்டிக் கொள்ளும் ஆண்மனம் இப்படித்தான் இருக்கிறது. காதலிலும், காமத்திலும் அது தன் இடத்தை நிறுவ முயற்சிக்கிறது. கவிதைக் கதைக்கு வாழ்த்துக்கள்.

ஆ.சுதா சொன்னது…

கவிதையின் குற்றவாளி பரிதாபத்துடன் சொற்களில் சிதைந்து கிடக்கிறான்.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு
எப்பவும் உங்கள் வரிகளும் சொற்களும் தனித்துவமானதே.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

மாதவராஜ் சொன்னதே என் கருத்தும்

அழகான கவிதை. வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா. நல்ல மொழியும் கூட.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு யாத்ரா. ஆனா தலைப்புத்தான், பலர் பலமுறை உபயோகித்து ஒரு மாதிரி கிளிஷே ஆகிவிட்ட தலைப்பு.

Thamira சொன்னது…

ரசித்தேன்.!

நந்தாகுமாரன் சொன்னது…

ஜ்யோவ் சொன்னதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்

மண்குதிரை சொன்னது…

mail அனுப்பியிருக்கிறேன் யாத்ரா.

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா. தலைப்புல கொஞ்சம் கவனமா இருங்க.

அகநாழிகை சொன்னது…

யாத்ரா, நல்ல கவிதை. நண்பர்களின் கருத்தைத்தான் மீண்டும் கூறவேண்டியிருக்கிறது. கவிதையின் தலைப்பைப் தவிர்த்திருக்கலாம். எனக்கு கவிதை எழுதுவதைவிட சிரமமான விஷயம் அதற்கான தலைப்பிடுவது.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் சொன்னது…

ஓஹ்ஹோ! ஏதேது? கதை பயங்கரமாப் போவுது? புடிச்சிருக்கு யாத்ரா.

இராவணன் சொன்னது…

நல்ல கவிதை நண்ப.

இருந்தாலும் நீங்க இப்படி பண்ணியிருக்ககூடாது. ;)

பண்றதையும் பண்ணி்டடு கவிதை வேற :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

//Intellectual hypocrite pervert isms//

இதுக்கு என்ன அர்த்தம்?

தமிழன்-கறுப்பி... சொன்னது…

அது சரி! நடக்கட்டும் நடக்கட்டும்.. :)

யாத்ரா சொன்னது…

மாதவராஜ், முத்து, சேரல், அனுஜன்யா, சுந்தர், ஆதி, நந்தா, மண்குதிரை, வேலன், அகநாழிகை, முத்துவேல்,இலக்குவண், தமிழன் அனைவருக்கும் நன்றி

தலைப்பு குறித்த தங்கள் அனைவரின் கருத்துளோடும் உடன்படுகிறேன், சுட்டியமைக்கு மிக்க நன்றி.

நண்பா இலக்குவண், நண்பா முத்துவேல்,நண்பா தமிழன்,
நடந்தது நடந்தது தான், என்ன பண்றது :)